Tap to Read ➤

வாழைத்தண்டின் மருத்துவகுணம் பற்றி தெரிந்துகொள்ளவோம்!

அருமருந்து!
varalakshmi n
முக்கனிகளுள் ஒன்றான வாழையின் அனைத்து பாகங்களும் உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் அளவில் சத்துக்களை உள்ளடக்கியுள்ளது
குறிப்பாக வாழைத்தண்டு பல நோய்களுக்கு மகத்தான மருந்தாகவும்,இதன் சாறு பல நோய்களுக்கு அருமருந்தாக பயன்பட்டுவருகிறது
தொடர்ந்து குடித்துவந்தால்,
உடல் எடை குறையும்,சர்க்கரை,
கொழுப்பு உடனடியாக ரத்தத்தில் கலப்பதை இதன் சாறு தடுக்கும்
கொழுப்பை உடலில் இருந்து நீக்கவும்,வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாக இருக்கும்
வாழைத்தண்டில் பொட்டாசியம்,எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது, வாழைத்தண்டு சாற்றுடன், எலுமிச்சைச் சாற்றையும் இரண்டும் கலந்து குடித்துவந்தால் சிறுநீரகத்தில் கால்சியம் கற்கள்
உருவாவதைத் தடுக்கும்
சிறுநீர் உற்பத்தியை அதிகரித்து,
நச்சுப்பொருட்களை வெளியேற்றும்,வாழைத்தண்டு சாற்றில் ஏலக்காய் தூளைப் போட்டு குடிப்பதும் சிறுநீரகக்கல் வராமல் தடுக்கும்
வாரத்துக்கு மூன்று முறை இதை அருந்திவர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
வாழைத்தண்டு சாற்றை அப்படியே குடிப்பது கொஞ்சம் கடினமானதான்,அதனுடன் மோர், ஆப்பிள் ஜூஸ் ,எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்கலாம்