பொதுவாக பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அழகும், பொலிவும்குறையும் என்ற ஒரு தவறான எண்ணம் இன்றைய சமூகத்தில் உள்ளது. ஆனால் உண்மையில் உடற்பயிச்சி பெண்களின் ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்த உதவுகிறது
பெண்கள் உடற்பயிச்சி செய்தால் கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்
தினமும் முறையாக உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் அழகாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்கும், பிரசவத்திற்கு பிறகு உடலில் ஏற்படும் தொங்கு சதைகள் குறையும்
நரம்புகள், எலும்புகளில் வலிமை பெறும், உடலில் சுரப்பிகள் சீராக செய்யப்பட்டு, தோலில் இயற்கையான பொலிவு வரும்
ஊளைச்சதை குறையவும், ஒல்லியானவர்களுக்கு தசைகள் உருவாக உதவும்
தினசரி உடற்பயிற்சி உடலுக்கு மட்டுமல்ல, நடை, நளினம், சிந்தனை அனைத்திலும் இளமையை தரும்
வயதான காலத்திலும் உடல் சக்தி நீடித்து, வெப்பம் மற்றும் குளிர் போன்ற மாற்றங்களை தாங்க உதவும்
எனவே, பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அழகு குறையும் என்பது தவறான கருத்து, உண்மையில் அது அவர்களின் அழகையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது