அஸ்வகந்தா மூலம் உடலுக்கு என்ன நன்மைகள் ஏற்படுகின்றன?
தமிழ் பெயர் அமுக்கிரா கிழங்கு ! அஸ்வகந்தா நன்மைகளும் பக்கவிளைவுகளும் !
varalakshmi n
அஸ்வகந்தாவின் முழுச்செடியுமே மருத்துவப் பயன்கள் கொண்டது,வட மொழியில் அஸ்வகந்தா தமிழகத்தில் பெயர் அமுக்கிரா கிழங்கு
செடி வேரும்,இலையும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது, அசுவகந்தி, அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், ஆசிவகம், இருளிச்செவி, வராககர்ணி பல்வேறு பெயர்களும் உண்டு
உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது, தமனிகளில் அடைப்பு,இதயத் தடுப்பு போன்ற இதய தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது
தூக்கம் இன்மை,மன அழுத்தத்தைக் குறைத்து புத்துணர்ச்சியை அளிக்கிறது
மூட்டு வலி,மூட்டு வீக்கம்,கீழ்வாதம், குடல் மற்றும் உடலின் செரிமான பிரச்சினைகளுக்கு நல்ல மருந்தாக செயல்படுகின்றது
நோய் எதிர்ப்பு சக்தி அஸ்வகந்தா தேநீருடன் சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால் ஜலதோஷம் சரியாகும்
அஸ்வகந்தா பயன்படுத்துவதால் சில பக்க விளைவுகள் ஏற்படும்
பிபி (BP) உள்ளவர்கள் அஸ்வகந்தாவை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்
அஸ்வகந்தாவை அதிகமாக உட்கொள்வது வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது
அதிகமாக உட்கொள்ளும் நபர்களுக்கு காய்ச்சல், சோர்வு, உடல் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றது