Tap to Read ➤

5ஜி தொழிநுட்பத்தினால் ஏற்படும் வளர்ச்சிகள்..!!

5ஜி சேவையின் மூலம் எந்தெந்த துறைகள் வளர்ச்சி அடையும் ?
Sidhanathan K
அதிவேக இணையத்தை வழங்கும் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
ஜியோ தனது 5ஜி சேவையை முதற்கட்டமாக டெல்லி, மும் பை, சென்னை, கொல்கத்தா போன்ற 13 மெட்ரோ நகரங்களில் தீபாவளிக்குள் வழங்க திட்டமிட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனம், 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டின் அனைத்து நகரங்களிலும் 5ஜி சேவை கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது.
அதிவேக டவுன்லோட் காரணமாக 5ஜி தொழில்நுட்பம் டெலிகாம் துறையை மேலும் மேம்படுத்தும்.
தொலைத் தொடர்புத் துறை, IoT மற்றும் OTT துறை ஆகியவை பயனடையும்.
செல்ஃப் டிரைவிங் கார் பயன்பாடு அதிகரிக்கும்.
விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) மெட்டாவெர்ஸ் போன்ற புதிய தொழில்நுட்பங்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
வீடுகளில் ரோபோக்கள் மற்றும் ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் ஆதிக்கம் அதிகரிக்கும்.
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு வருவாயை அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும்.
ஆன்லைன் வகுப்புகளுக்குப் பஞ்சமில்லாமல் உலகத் தரம் வாய்ந்த கல்வியை எளிதில் அணுக முடியும்.
வீடியோ அழைப்புகள் அதிநவீனமாக மாறும் என்பதால் டெலிமெடிசின் சேவை மிகவும் திறமையானதாக மாறும்.
ஆன்லைன் கேமர்களுக்கு ஒரு தரமான அனுபவத்தை தரப்போகிறது.
எரிசக்தி, இணைய உபகரணங்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்துறை நடவடிக்கைகளில் புதுமைகளைக் காணலாம்.
5ஜியின் ஒட்டுமொத்த பொருளாதார தாக்கம், 2035-க்குள் இந்தியா 450 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5ஜி சேவையினால் புதிய யுக வணிகங்கள் உருவாகலாம் மற்றும் நிறுவனங்களுக்குக் கூடுதல் வருவாய் ஏற்படம்.
மேலும் புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.