Tap to Read ➤

அற்புதமான மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டையின் நன்மைகள்..!!

பிரண்டையின் மருத்துவ பயன்கள்!!
Sidhanathan K
பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன.
பிரண்டைச் சாறு உடம்பில் பட்டால் அதிகமான அரிப்பு ஏற்படுகிறது. பிரண்டைக்கு வஜ்ரவல்லி என்கிற மாற்றுப் பெயரும் உண்டு.
மேல் தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கிய பிரண்டையை நெய்யில் வறுத்து, தேவையான அளவு புளி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து அரைக்க வேண்டும். பின் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்த இந்த துவையலை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும்.
பிரண்டைத் துவையலை குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வர எலும்புகள் உறுதியாக வளரும். மேலும் எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாக கூடவும் இது உதவுகிறது.
பிரண்டையை நன்கு உலர்த்தி பொடியாக்கி நீரில் குழைத்து எலும்பு முறிவுள்ள பகுதியில் தடவினால் உடைந்த எலும்புகள் ஒட்டிவிடும்.
மேலும் உடல் செயல்பாடு மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கிறது. மூளை நரம்புகளும் வலுப்பெறுகிறது, வயிற்றுப் பூச்சிகளையும் கட்டுப்படுத்துகிறது.
நன்றாக முற்றிய பிரண்டைத் தண்டுகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைத்து உலர்த்தி வற்றலாக செய்து கொள்ள வேண்டும். இந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட பசியின்மை, நாக்குச் சுவையின்மை ஆகியன குணமாகும்.
பிரண்டையில் இருந்து சாறு எடுத்து 6 டீஸ்பூன் சாறு ஒரு ஸ்பூன் நெய்யுடன் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர மாதவிலக்கு சீராகும்.
அடிபட்ட வீக்கம் குணமாக பிரண்டையிலிருந்து சாறு எடுத்து, புளி மற்றும் உப்பு சேர்த்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் அடிபட்ட இடத்தில் மேல் பூச்சாக பற்று போட விரைவில் வீக்கம் வற்றும்.