Tap to Read ➤

அதிமதுரத்தில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன?

அதிமதுரம் இனிப்பு சுவை கொண்ட ஒரு மூலிகையாகும்.
HTML Tamil
உடலுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி அதிமதுரத்தில் நிரம்பியுள்ளது.
அதிமதுரப் பொடியை வெல்லத்துடன் தண்ணீரில் கலந்து குடித்தால், மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக்கினால், வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீர் தொண்டைக் கரகரப்பை நீக்கும்.
அதிமதுரத் தூள் கலந்த நீரை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் பருகி வந்தால் மூட்டு வலி பிரச்சனைகள் நீங்கும்.
அதிமதுரத்தை நீரில் ஊற வைத்து குடித்தால், சிறுநீர்ப்பையில் உள்ள புண்கள் ஆறும். சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதையும் தடுக்கும்
அதிமதுரத்தின் இனிப்பு, நீண்ட நேரம் நாவிலும், தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.
அதிமதுரம் வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து கசாயமாக குடித்தால் தொண்டை புண் ஆறும்.
அதிமதுரப் பொடியை நீரில் கலந்து, இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து பருகினால் அல்சர் புண்கள் குணமாகும்.
அதிமதுரம், கடுக்காய், மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்து லேசாக வறுத்து அரைத்து, தேனில் 5 கிராம் கலந்து சாப்பிட்டால் இருமல் நீங்கும்.
அதிமதுரத்தை பசும்பாலில் ஊற வைத்து அரைத்து, தலையில் தேய்த்து 2 மணி நேரம் கழித்து குளித்தால் முடி உதிர்வது குறையும்.
அதிமதுர துண்டுகளை பாலுடன் சேர்த்து அரைத்து, சிறிது குங்குமப்பூ போட்டு கலந்து, வழுக்கை தலையில் தடவினால் முடிகள் வளர தொடங்கும்.