Tap to Read ➤

வாழைப்பழத் தோலிலுள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா?

வாழைப்பழத் தோலில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் உள்ளன.
HTML Tamil
வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பயன்களைப் போல், வாழைப்பழத் தோலிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளன.
வாழைப்பழத் தோல்களில் பூஞ்சை எதிர்ப்பு கலவை, ஆன்டிபயாடிக் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு, அதன் தோலையும் சாப்பிட்டால் தூக்கம் நன்றாக வரும்.
உடலில் மருக்கள் இருக்கும் இடத்தில், வாழைப்பழத் தோலால் நன்றாக தேய்த்து வந்தால் மருக்கள் நீங்கிவிடும்.
முகப்பரு உள்ள இடத்தில் வாழைப்பழத் தோலை தடவினால், அதிலுள்ள என்சைம், சருமத்தின் துவாரங்களில் சென்று, பருக்கள் மற்றும் தழும்புகளையும் மறைய செய்கிறது.
வாழைப்பழத் தோல்கள், பெருங்குடலை சுத்தப்படுத்தி, மலச்சிக்கலில் இருந்து விடுபட பெரிதும் உதவுகிறது.
இதய நோய், நீரழிவு, புற்றுநோய் என பல நோய்களை எதிர்க்கும் ஆற்றல் வாழைப்பழத் தோலுக்கு உண்டு.
வாழைப்பழத் தோல், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்டது. மேலும், நோயெதிர்ப்பு சக்தியையும் உருவாக்குகிறது.
பச்சை வாழைப்பழத் தோல்கள், ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.
அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த வாழைப் பழத் தோல்கள், அனைத்து வகையான அழற்சிகளையும் போக்க உதவுகிறது.
பல் துலக்கிய பின்னர், வாழைப்பழத் தோலால் பற்களை தேய்த்தால், பற்கள் பளிச்சென்று மின்னும்.
உடலில் ஏற்பட்ட காயங்கள் மீது வாழைப்பழத் தோலை தேய்த்தால், காயம் விரைவில் குணமாகிவிடும்.
சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலை தேய்த்தால், எரிச்சல் நின்று, சருமம் இயல்பு நிலைக்கு திரும்பும்.