Sidhanathan K       Nov 20, 2024

வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள் என்னென்ன..? அவைகளை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!!

நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவைப்படுகின்றன. அந்தவகையில், வைட்டமின் ஈ தோல் மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

அப்படியானால் வைட்டமின் ஈ குறைபாடு தோல் மற்றும் முடியை சேதப்படுத்துவதோடு தசைகளையும் பலவீனப்படுத்துகிறது. இப்போது வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பாதாம் ஆனது ஆரோக்கியமான கொழுப்பு, புரதம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது.

2 டீஸ்பூன் (30 கிராம்) சூரியகாந்தி விதைகளில் சுமார் 4 மி.கி வைட்டமின் ஈ ஊட்டச்சத்து உள்ளது. மேலும், இந்த விதைகள் செலினியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.

ஒரு முழு அவகேடோ பழத்தில் சுமார் 2.7 மி.கி வைட்டமின் ஈ ஊட்டச்சத்து அடங்கியுள்ளது. இது தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட அளவில் 18 சதவீதமாகும்.

ஒரு கப் சமைத்த கீரையில் சுமார் 1.9 மி.கி வைட்டமின் ஈ உள்ளது. இது சிறந்த தோல் பராமரிப்பு மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. 

வேர்க்கடலை உடலுக்கு புரதத்தை வழங்குவதோடு வைட்டமின் ஈ ஊட்டச்சத்தையும் வழங்குகிறது. அந்தவகையில், வேர்கடலையிலிருந்து தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவான 2.2 மி.கிராம் வைட்டமின் ஈ-ஐ பெறலாம்.