Tap to Read ➤

தானம் செய்வதால் ஏற்படும் நற்பலன்கள்

தானம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் நன்மைகள் கிடைக்கிறது.
HTML Tamil
'தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும்' என்பதற்கேற்ப, நமக்கு மிஞ்சியது போக மீதமுள்ளவற்றை தானம் செய்யவது நல்லது.
தானம் வழங்கும் பொருட்களுடன் துளசி இலையையும் சேர்த்து கொடுத்தால் இரட்டிப்பான பலன் கிடைக்கும் என சாஸ்திரம் கூறுகிறது.
அன்னதானம்

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். இதனால் பூர்வ ஜென்ம கர்ம வினைகள் தீருவதோடு, பித்ருக்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும்.
வஸ்திர தானம்

 ஏழை, எளியோருக்கு ஆடைகளை தானம் செய்தால், ஆயுள் விருத்தி ஏற்படும். சுகபோக பாக்கிய விருத்தியும், உடல் வலிமையும் உண்டாகும்.
கோ தானம்

பசுவை தானம் செய்தால் பல தலைமுறைளுக்கும் நன்மை பயக்கும். பித்ரு சாப நிவர்த்தியும், இல்லத்தில் தோஷங்களும் நீங்கும்.
அரிசி தானம்

 பூர்வ ஜென்ம தோஷங்கள் விலக, வீடற்ற ஏழை - எளியோருக்கு அரிசி தானம் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்
தேன் தானம்

குழந்தைகள் இல்லாதவர்களும், கர்ப்பப்பை பாதிக்கப்பட்டவர்களும் வெண்கலப் பாத்திரத்தில் தேனை தானம் செய்தால் நன்மை கிடைக்கும்.
நெய் தானம்

நோயால் பாதிக்கப்படுவோர், பசு நெய்யை தானம் செய்யலாம். மேலும், குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்திற்கும் இது வழி கிடைக்கும்.
கம்பளி - பருத்தி தானம்

 முதியவர்களுக்கு கம்பளி தானம் செய்தால், வாயு சார்ந்த நோயு குணமடையும். பருத்தி ஆடை தானம் செய்தால் குஷ்ட நோய் குணமாகும்.
எள் தானம்

அமாவாசை தினத்தன்று எள் தானம் செய்யவது சிறப்பாகும். கருப்பு எள்ளை தானம் செய்தால், பல பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
வெல்லம் தானம்

வறுமை நீங்கி, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கும், மகிழ்ச்சி அடையவும், வெல்லத்தை தானம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.