Tap to Read ➤

உங்களைப் பற்றிய கனவில் உள்ள பலன்கள் !!

கண்ட கனவின் பலன்கள் என்னென்ன ?
Sidhanathan K
உங்கள் கனவில் கண்ணாடியில் உங்களைப் பார்த்தால், நீங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வீர்கள் என்று அர்த்தம்.
யாரோ ஒருவர் உங்களை அழகுபடுத்துவது போல கனவு கண்டால் நெருங்கிய நண்பர் நம்பிக்கை துரோகம் செய்ய போகிறார் என்று பொருள்.
உடலில் இருந்து ரத்தம் வருவதை கனவில் கண்டால், உங்கள் திறமை அங்கீகரிக்கப்பட்டு, புகழும், செல்வமும் கிடைக்கும் என்று அர்த்தம்.
நீங்கள் ஒரு அந்நியருடன் பேசுவதுபோல் கனவு கண்டால் மற்றவர்களால் பதவி உயர்வு பெறப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
உங்கள் கனவில் ஒரு அழகான பெண்ணைக் கண்டால், நீங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
நீங்கள் உங்கள் ஆசிரியரை பார்த்து பேசுவது போல கனவு கண்டால் உங்கள் வாழ்வில் நன்மை ஏற்பட போகிறது என்று பொருள்.
உடன்பிறந்தவர் உங்கள் கனவில் வந்தால் நீங்கள் சந்தித்த பொருளாதார நெருக்கடிகள் தீரும் என்று அர்த்தம்.
உங்கள் தந்தையை கனவில் கண்டால் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக தீரும் என்று அர்த்தம்.
நீங்கள் யாருக்காவது அறிவுரை கூறுவது போல் கனவு வந்தால் உங்கள் நண்பர்களிம் மனக்கசப்பு தோன்றும் என்று அர்த்தம்.
நீங்கள் யாரிடமாவது கோபம் கொள்வது போல் கனவு கண்டால் நீங்கள் செய்யும் புதிய முயற்சிகள் தோல்வி அடையப்போகிறது என்று பொருள்.
உங்கள் காதலன் அல்லது காதலியிடம் காதலை சொல்வது போல கனவு கண்டால் உங்கள் வேலை வெற்றிகரமாக முடிவடையும் என்று அர்த்தம்.
பெண் கர்ப்பம் ஆவது போல் கனவு கண்டால் நீங்கள் வளர்ச்சி அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.
அறிமுகமில்லாதவர்களுடன் உடலுறவு கொள்வது போல் கனவு கண்டால், உங்கள் வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உயரப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
நீங்கள் ஒருவரை முத்தமிடுவது போல் கனவு கண்டால் பிரச்சனை வரப்போகிறது என்று அர்த்தம்.
நீங்கள் அடிக்கடி பாலியல் சம்பந்தமான கனவு கண்டால் நீங்கள் விரும்பியது எதுவும் கிடைக்காது என்று அர்த்தம்.