Tap to Read ➤

தினமும் தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன ?

தேனின் மருத்துவ பலன்கள் !!
Sidhanathan K
ஒரு கப் கொதிக்கும் வெந்நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தாங்கக் கூடிய சூட்டுடன் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் கடுமையான வயிற்று வலி உடனே நின்றுவிடும்.
உணவுக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் தினமும் இரண்டு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல் புண்கள் குணமாகும்.
ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் அரை எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் உடல் எப்போதும் சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளித் தொல்லை குறையும்.
நெல்லிக்காயை தேனுடன் நறுக்கி அதனுடன் சிறிது ஏலக்காய், ரோஜா இதழ்களைச் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் உலர்த்தி தினமும் காலை மாலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர வறட்டு இருமல் குணமாகும்.
தேனை எடுத்து மூட்டு வலி உள்ள இடத்தில் நன்றாக தடவி வந்தால் மூட்டு தேய்மானம் குறைந்து மூட்டு வலி நீங்கும்.
தினமும் இரவில் படுக்கும் முன் ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால், பசியின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம், தொற்று நோய்களால் ஏற்படும் காய்ச்சல், அதிக வேலை காரணமாக ஏற்படும் சோர்வு ஆகியவை நீங்கும்.
வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பொலிவடையும்.
தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தினமும் தேன் மற்றும் மாதுளம் பழச்சாறு சம அளவு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் குணமாகும்.
விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது.
குழந்தைகள் தினமும் தேன் சாப்பிட்டு வந்தால், கால்சியம் மற்றும் மெக்னீசியம் அளவு அதிகரித்து நல்ல வலிமை கிடைக்கும்.