Tap to Read ➤

ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்

ஆப்பிள் பழத்தின் தோலை நீக்காமல் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
HTML Tamil
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஆப்பிள் பழமும் ஒன்று.
ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பொட்டாசியம், சோடியம், உயிர்ச்சத்துக்கள், வைட்டமின்கள் அடங்கியுள்ளன.
அதிலும், ஆப்பிள் பழத்தை தோலை நீக்காமல், அப்படியே சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
ஆப்பிள் பழத்தின் தோலில் உள்ள க்யூயர்சிடின் என்ற பொருள், நுரையீரலை சீராக செயல்பட வைக்கிறது.
மூளைச் செல்கள் பாதிப்படைவதையும், ஞாபக மறதி ஏற்படுவதையும் தடுத்து, ஞாபக சக்தியை ஆப்பிள் தோல் அதிகரிக்கிறது.
ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால், சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மாரடைப்பு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.
ஆப்பிள் தோல், பல் சொத்தை ஏற்படுவதை தடுக்கிறது. உமிழ்நீர் அதிகரித்து, வாய் துர்நாற்றம் வீசுவதையும் நீக்குகிறது.
ஆப்பிள் தோலில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கும் தன்மை கொண்டது
ஆப்பிள் பழத்தை தோலுடன் சாப்பிட்டால் எலும்புகள் பாதுகாக்கப்படும். மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவது நல்லது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், ஆப்பிள் பழத்தை தோல் நீக்காமல் சாப்பிட்டால் பலன் கிடைக்கும்
ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் கண்புரை ஏற்படும் அபாயம் குறைவதோடு, கண்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.