Tap to Read ➤

வாழை இலையில் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்

தலை வாழை இலையில் விருந்தளிப்பது நமது பாரம்பரிய கலாச்சாரமாகும்.
HTML Tamil
தெய்வீக மரமாக கருதப்படும் வாழை மரத்தின் இலையில், விருந்தோம்பல் செய்வது, தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரமாகும்.
வாழையிலையின் மேலுள்ள பச்சைத் தன்மை உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் தன்மை கொண்டது.
வாழை இலையில் சாப்பிட்டு வந்தால், நன்கு பசி தூண்டப்படும். தொடர்ந்து இதில் சாப்பிட்டால் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழலாம்.
வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். நச்சுக்கிருமிகளை அழிக்கும் தன்மை வாழை இலைக்கு உண்டு.
தொடர்ந்து வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல், நீண்ட நாள்கள் தலைமுடி கருப்பாக இருக்கும்.
வாழை இலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள தோல் பளபளப்பாகும். சருமத்திற்கு இளமையான தோற்றம் கிடைக்கும்.
வாழை இலையில் சாப்பிட்டால், மந்தம், உடல் பலவீனம், இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். பித்தமும் தணியும்.
வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள், வாழை இலையில் சாப்பிட்டு வந்தால், உணவு செரிமானம் ஏற்பட்டு, பசி உண்டாகும்.
வாழையில் இலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிறு மற்றும் குடல் பகுதிகளில் இருக்கும் புண்கள் விரைவில் குணமாகும்.
ஆரோக்கியமான உணவுகளை வாழை இலையில் சாப்பிட்டு வந்தால், நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழலாம்.