Sidhanathan K       Jan 20, 2025

செலரி கீரையை உணவில் அதிகம் எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!

செலரிக் கீரை ஆனது தாதுக்கள், வைட்டமின் கே, சி, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.

இது எலும்பு ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கவும் இரத்த அழுத்தத்தை சீராக்கவும் உதவுகிறது.

செலரிக் கீரையில் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கனிசமான அளவு நார்ச்சத்து உள்ளதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

இதில் உள்ள ஃபிளாவனாய்டு மற்றும் பாலிபினால் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உடலில் அழுத்தம் மற்றும் வீக்கத்தை எதிர்த்துப் போராடவும், இதய நோய் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.

செலரியில் உள்ள பொட்டாசியம் ஆனது சோடியத்தின் விளைவுகளை குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

செலரியில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது.

செலரி அதிக அளவு உண்ணும்போது அதிலுள்ள அதிக நார்ச்சத்து சிலருக்கு வாயு, வயிறு உப்புசம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

செலரியில் உள்ள சோராலன்கள் எனும் தாவர சேர்மங்கள் ஆனது சருமத்தை சூரிய ஒளிக்கு ஏற்ற அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றுகிறது.