Tap to Read ➤

தினமும் கிராம்பு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

கிராம்பை தினசரி எடுத்து கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்
Sidhanathan K
சமையலுக்கு பயன்படுத்தப்படும் கிராம்பில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.
கிராம்பில் கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், தியாமின், ரிபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின் சி மற்றும் ஏ உள்ளன.
ஆயுர்வேதத்தின் படி, கிராம்பு இரத்த ஓட்டம், செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
இருமல், குரல் வளை அழற்சி, தொண்டை வலி மற்றும் ஜலதோஷம் போன்ற மேல் சுவாசக் கோளாறுகளை போக்க கிராம்பு உதவுகிறது.
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் தினமும் இரண்டு கிராம்புகளை மென்று சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
கிராம்புகளை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர இரைப்பை எரிச்சல் மற்றும் வாயுத்தொல்லை குணமாகும்.
கிராம்புகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் நோய்க்கிருமிகளுக்கு எதிராக போராட உதவுகிறது.
கிராம்பை அதிகமாக எடுத்துக் கொண்டால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென குறையும். எனவே கவனமாக எடுப்பது நல்லது.