நவரா அரிசியில் வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் தானிய நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது.
இந்த அரிசியை பலவீனமாக இருப்பவர்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஏரளாமானா நன்மைகளைப் பெறலாம்.
நவரா அரிசியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை சீராக வைக்க உதவுகிறது.
இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி-அக்சிடென்ட்கள் செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை குறைக்க உதவுகிறது.
நவரா அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் பசியை கட்டுப்படுத்தி எடை குறைப்பதில் உதவுகிறது.
நவரா அரிசி உடல் வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கவும் உதவுகிறது.
நவரா அரிசி மூட்டுகளில் ஏற்படும் இறுக்கம், முதுகு வலி, பக்கவாதம், ருமட்டாய்டு ஆர்த்திரைட்டிஸ் ஆகியவற்றுக்கும், சருமப் புண்கள் மற்றும் சொரியாசிஸ் போன்ற நோய்களை குணப்படுத்தவும் உதவுகிறது.
இந்த அரிசியை கஞ்சியாகவோ அல்லது உணவாகவோ குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சிறு வயதில் ஏற்படும் சளி குணமாகும்.