சதகுப்பையில் ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
சதகுப்பையில் அதிக நார்ச்சத்து இருப்பதால் பசியை அடக்கி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மேலும், செரிமானத்தை மேம்படுத்துவதுடன் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
இது உடலிலுள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது.
சதகுப்பை இலை ஆசனவாய் பகுதியில் அதிக கடுப்பு இருந்தால் அதை குறைக்கவும் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
சதகுப்பை பொடியை 5 கிராம் அளவு எடுத்து கொத்தமல்லி சாறுடன் கலந்து சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.
இதன் சூரணத்தை 1 கிராம் அளவு எடுத்து பனகற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் இரைப்பையில் உள்ள மாசுக்களை நீக்கி சுத்தமாக்கும்.
சதகுப்பை பச்சை சாறு 20 மி.லி அளவு எடுத்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி தேனில் கலந்து கொடுத்தால் குழந்தைக்கு ஏற்படும் வயிற்று வலி குறையும்.