Sidhanathan K       Dec 01, 2024

ஊறவைத்த சப்ஜா விதை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய பலன்கள்..!!

துளசி வகையை சேர்ந்த சப்ஜா விதைகள் திருநீற்றுப்பச்சை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த செடியிலிருந்து தான் சப்ஜா விதைகள் கிடைக்கின்றன.

மிகவும் குளிர்ச்சி தன்மை வாய்ந்த சப்ஜா விதையில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம், ஒமேகா-3 மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இந்த சப்ஜா விதைகள் புற்றுநோய் மற்றும் இதய நோய்களை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

நார்ச்சத்து நிறைந்த சப்ஜா விதை நம் உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்ற உதுவுகிறது.

ஒரு ஸ்பூன் சப்ஜா விதையில் 7 கிராம் நார்ச்சத்து உள்ளது. இவ்வாறு நார்ச்சத்து நிறைந்த சப்ஜா விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதோடு பசியும் கட்டுப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு ஸ்பூன் சப்ஜா விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.

நீரில் ஊற வைத்த சப்ஜா விதைகள் செரிமான நொதிகளை உண்டாக்கி, செரிமானத்தை பலப்படுத்துகிறது.

இந்த சப்ஜா விதையை பாலில் கலந்து குடிப்பதால் குடல் இயக்கம் சீராகி மலச்சிக்கல் நீங்கும்.

இரத்தப்போக்கு பிரச்சனை மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனை உள்ள பெண்களுக்கு இந்த விதைகள் சிறந்த தீர்வாகும்.