Tap to Read ➤

'பிள்ளையார்' பிடித்து வைப்பதன் பலன்கள் பற்றி தெரியுமா?

எந்த காரியத்தையும் விநாயகரை வணங்கி தொடங்குவது மரபு.
HTML Tamil
நல்ல காரியங்களை தொடங்கும்போது, மங்களகரமாக நடைபெற, ஒரு கைப்பிடி மஞ்சளை, பிள்ளையாராக பிடித்து வைப்பது வழக்கம்.
எந்தெந்த பிள்ளையார் பிடித்து வைத்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டால் சகல சௌபாக்கியமும், காரிய சித்தியும் கிடைக்கும்.
குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்தால், செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளின் கல்வி சிறக்கும்.
சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால், புத்திர பேறு கிடைக்கும்.
விபூதியால் பிள்ளையார் பிடித்து வழிபட்டால், உஷ்ண நோய்கள் நீங்கும்.
சாணத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால், சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், எதிரிகளின் தொல்லை நீங்கும். எதிரிகளும் நண்பராவார்கள்.
வாழைப் பழத்தில் பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்தால், வம்ச விருத்தி உண்டாகும்.
வெண்ணெயில் பிள்ளையார் பிடித்து  வழிபட்டால், கடன் தொல்லைகள் நீங்கும்.