மலை வாழைப்பழம் சற்று விலை உயர்ந்த பழமாக இருந்தாலும், அதன் சுவையும், வாசனையும் நன்மை ஈர்க்க செய்கிறது
இப்பழம் தரும் முக்கிய நன்மைகள் மற்றும் யாரெல்லாம் இதை சாப்பிட கூடாது என்பதையும் பார்ப்போம்
இரத்த சோகை உள்ளவர்கள் வாரம் 2 முறை காலை மற்றும் இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும்
உடல் வலிமையையும் அழகும் வளர இந்தப் பழம் மிகவும் உதவியாக இருக்கிறது
அஜீரண கோளாறு உள்ளவர்கள், பழத்தில் சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்சனைகள் குறையும்.
இவ்வாறு எடுத்துக்கொண்டால் சில நேரங்களில் பேதி ஏற்படலாம், ஆனால் அது தானாகவே நின்றுவிடும்
வாரத்தில் 2-3 முறை சாப்பிட்டாலே போதுமான நன்மைகள் கிளைக்கும்
வாதநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தப் பழத்தை சாப்பிடக்கூடாது
மலை வாழைப்பழம் சுவையும் நலனும் தரும் பழம். அளவோடு எடுத்தால் உடல்நலத்துடன், உடலழகும் மெருகேறும்