பவளமல்லிகை வெண்மையான இதழ்களையும் ஆரஞ்சு நிற காம்புகளையும் கொண்டது. பாற்கடலை கடைந்த பொழுது வந்த ஐந்து பொருள்களில் பவளமல்லி எனப்படும் பாரிஜாதமும் ஒன்றாகும்.
இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும் இந்த பூக்கள் அற்புதமான வாசனையை உடையது. இம்மலரின் காம்பு நல்ல சிவப்பாக இருக்கும். 5 இதழ்கள் வெண்ணிறமாக காணப்படும்.
இறைவனை அர்ச்சிப்பதற்கு உரிய எட்டு மலர்கள் உள்ளன. அந்த எட்டு மலரில் இந்த பாரிஜாத மலரும் ஒன்று. சிவனுக்கும், திருமாலுக்கும் அர்ச்சனை செய்ய ஏற்ற மலர் இதுவாகும்.
இந்த செடி மரமாக வளர்ந்து பூ பூக்கும் போது வீட்டில் எந்தவித தீய சக்திகள் அண்டாது. பவளமல்லி மரத்தின் வேர் முதல் இதழ்கள் வரை பயனுடையது.
ஆயுர்வேதத்தில் இதன் இலைகள், பூக்கள், விதைகள் ஆகியவை வயிற்றுத் தொந்தரவு, மூட்டு வலி, காச்சல், தலைவலி போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.
பவளமல்லி வேர் பட்டை கோழையகற்றும், பித்தத்தை சமப்படுத்தும். இதன் இலைக் கொழுந்தை இஞ்சிச் சாற்றில் கலந்து தினம் இரு வேளை கொடுக்க காய்ச்சல் குணமாகும்.
மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல்களை எதிர்கொள்ள பவளமல்லி தாவரம் சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. பவளமல்லியை பெண்கள் தலையில் வைப்பதால் பொடுகு பிரச்சனை தீரும்.
இடுப்பு வலி உள்ளவர்கள் பவளமல்லியின் இதழ்களை கசாயம் வைத்து காலை, மாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் விரைவில் இடுப்பு வலி குணமாகும்.
பவளமல்லி இலையை கசாயம் போல காய்ச்சி குடித்தால் காய்ச்சல் குணமடையும் என சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். கண்வலிக்கும் இந்த மருந்து பயன்படுகிறது.
வயிற்றில் புழுக்கள் வெளியேற பவளமல்லி இலைச் சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து அதோடு தேன் கலந்து அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.