Tap to Read ➤

இரவில் உடைகள் இல்லாமல் உறங்கினால் கிடைக்கும் நன்மைகள்..!!

நிர்வாணமாக தூங்குவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்..?
Sidhanathan K
ஆடையின்றி ஃப்ரீயாக தூங்குவதை பலர் ஆபாசமாகவும் அசிங்கமாகவும் நினைக்கலாம்.
ஆனால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் பிறந்த மேனியாக தூங்கினால் ஏராளமான நன்மைகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் தொகையில் 2 சதவீதம் பேர் மட்டுமே ஆடையின்றி நிர்வாணமாக உறங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் அமெரிக்காவில் 100க்கு 40 பேர் ஆடையின்றி தூங்குகிறார்கள்.
நிர்வாணமாக உறங்குவது அமைதியான மனநிலையை தரும். உடலில் அழுத்தம் கொடுக்கும் எந்த வித உடைகளும் இல்லாமல் ரிலாக்ஸாக உணர்வீர்கள்.
நிர்வாணமாக தூங்குவது சருமத்திற்கு மிகவும் நல்லது. தோல் இயற்கையாக சுவாசிக்கும் மற்றும் அதன் ஆரோக்கியம் மேம்படும்.
சூரிய ஒளி இல்லாமல் எப்போதும் துணியால் மூடப்பட்டிருக்கும் உங்களின் அந்தரங்க உறுப்புகள் வெளிக்காற்றை சுவாசிக்கும் வாய்ப்பைப் பெறும். இதனால் தோல் நோய்கள் வராமல் இருப்பது மட்டுமின்றி, அந்தரங்க உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.
உடம்பில் ஆடையின்றி உறங்குவதால் உடலின் வெப்பம் குறைவதோடு, உடலில் உள்ள கலோரிகளும் குறையும்.
நிர்வாணமாக தூங்குவது உடலில் ஹார்மோன் சுரப்பியை சீராக்க உதவுகிறது. இதன் காரணமாக, இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாடுகளும் சீராகிறது.
ஆடையின்றி தூங்குவது கணவன் மனைவி இடையேயான தாம்பத்திய வாழ்க்கையின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆடையின்றி உறங்குவது ஆழ்ந்த தூக்கம் கிட்டுவதுடன், அதிக எடை கூடுவதும் தடுக்கப்படுகிறது.
இது நம்ம ஊருக்கு பழக்கப்படாத ஒன்றாக இருந்தாலும் சரியான முன்னேற்பாடுகள் உடன் முயற்சிக்கலாம்.