காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் உண்டு. அவ்வாறு நாம் குடிக்கும் டீ மற்றும் காபியில் நிறைய வகைகள் உள்ளன. அந்த வகைகளில் சுக்கு மல்லி காபியும் ஒன்று.
சுக்கு மல்லி காபி குடிப்பதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.
மூலிகை காபியான இந்த சுக்கு மல்லி காபியினை தென்னிந்தியாவில் உள்ள மக்கள் தான் அதிக அளவு குடிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
சுக்கு மல்லி காபியில் உள்ள எண்ணற்ற சத்துக்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருமல் மற்றும் சளியில் இருந்து பூரண நிவாரணம் அளிக்கிறது.
குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்த சோகையை கட்டுப்படுத்தவும், இரத்த சோகையை வராமல் தடுக்கவும் சுக்கு மல்லி காபி பயன்படுகிறது.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த சுக்கு மல்லி காபியை குடித்தால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கலாம். மேலும், பக்கவாதமும் வராமல் தடுக்கலாம்.
சுக்கு மல்லி காபியை தினமும் குடிப்பதன் மூலம், நாம் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகி வயிறு தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
சுக்கு மல்லி காபியில் உள்ள மூலிகை பொருட்கள் உடல் பருமனை குறைக்க உதவுகிறது.