Tap to Read ➤

தோப்புக்கரணம் போடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன ?

தோப்புக்கரணத்தின் பின்னால் உள்ள அறிவியல் உண்மைகள் !!
Sidhanathan K
தோப்புக்கரணம் என்னும் ஒற்றைப் பயிற்சியின் மூலமாக யோகாசனத்தின் அத்தனை நன்மைகளையும் பெற முடியும்.
நமது முன்னோர்களும் தோப்புக்கரணத்தை விநாயகர் வழிபாட்டின் ஒரு அங்கமாகவே வைத்திருந்தனர்.
காது மடல்களைப் பிடித்து தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான ஒரு தூண்டுதல் கிடைக்கிறது.
உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள 'சோலியஸ்' எனும் தசை இயங்க ஆரம்பிக்கிறது.சோலியஸ் தசையால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.
காலை நேரங்களில் தோப்பு கரணம் போட்டால் அது நமக்கு நாள் முழுவதும் சுறுசுறுப்பை தருகிறது.
இந்த எளிமையான உடற்பயிற்சியின் மூலம் நியூரான் செல்கள் புத்துணர்ச்சி அடைகின்றன.
தோப்புக்கரணம் போடுவதால் மூளைசெல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. நாடிகள் சுத்தம் பெறுகின்றன.
மூளையில் உள்ள வலது மற்றும் இடது பகுதி சமமான தூண்டுதல் அடைய உதவுகின்றது.
அதுமட்டுமில்லாமல் மூளைக்கு செய்திகளை பரிமாற்றம் செய்யும் காரணிகள் வலுப்பெற உதவுகிறது.
தோப்புக்கரணம் போடுவதால் மூளையின் நரம்புகள் தூண்டப்பட்டு ஞாபகசக்தி அதிகரிக்கும்.
தினமும் 5 நிமிடம் தவறாமல் செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை.