Sidhanathan K       Feb 26, 2025

விளக்கெண்ணெய் பயன்படுத்துவதால் சருமம் மற்றும் முடிக்கும் கிடைக்கும் நன்மைகள்..!!

விளக்கெண்ணெய் உடலுக்கு செரிமானம், எடை இழப்பு, தொப்பை கொழுப்பு குறைப்பு மற்றும் கட்டிகளை கரைத்தல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

பழங்காலத்திலிருந்தே, நம் முன்னோர்கள் முடி ஆரோக்கியத்திற்கும், உடல்நல பிரச்சனைகளை தீர்க்கவும் கை வைத்தியங்களில் விளக்கெண்ணெயை பரவலாக பயன்படுத்தி வந்தனர்.

விளக்கெண்ணெய் சற்று அடர்த்தியான மற்றும் நறுமணமற்ற எண்ணெய் ஆகும். ஆமணக்கு விதைகளில் இருந்து எடுக்கப்படுவதால் இந்த விளக்கெண்ணெயை ஆமணக்கு எண்ணெய் என்றும் அழைப்பர்.

விளக்கெண்ணெய் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும் ஒரு மலமிளக்கியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு இந்த எண்ணெயை சரியான அளவில் உட்கொள்ள வேண்டியது அவசியம்.

விளக்கெண்ணெயிலுள்ள ரிசினோலிக் அமிலம் குடல் தசைகளை சுருங்கச் செய்து, குடலில் இருந்து மலத்தை வெளியேற்றுகிறது.

விளக்கெண்ணெய் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இருப்பினும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் உட்கொண்டால், அது வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வயிற்று உப்புசத்திற்கு வழிவகுக்கும்.

இந்த எண்ணெயை அளவுக்கு அதிகமாகவும் நீண்ட காலத்திற்கும் குடித்து வந்தால் குமட்டல், வயிற்றுப் பிடிப்புகள், வயிற்றுப்போக்கு, நீரிழப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.

கூடுதலாக, இந்த எண்ணெய் சிலருக்கு அழற்சியையும் ஏற்படுத்தலாம். எனவே சற்று கவனமாக இருக்க வேண்டும்.

விளக்கெண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது. அதனால்தான் இது அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சில நேரங்களில் இது சருமத்தில் எரிச்சலையும் அரிப்பையும் ஏற்படுத்தலாம்.

விளக்கெண்ணெயானது வறண்ட ஸ்கால்ப், முடியின் வளர்ச்சி மற்றும் பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.

அதிகப்படியான முடி உதிர்தலை அனுபவிப்பவர்கள் உச்சந்தலையில் விளக்கெண்ணெயை தடவி மசாஜ் செய்து ஊறவைத்து குளிப்பதன் மூலம், தலைமுடி தொடர்பான பிரச்சனைகளை நீக்கி, முடி அடர்த்தியாக வளர உதவும்.