Tap to Read ➤

வெள்ளைப் பூசணியின் நற்பயன்கள்

பூசணிக்காயை உணவில் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
HTML Tamil
வெண்பூசணியில் வைட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் அதிகம் உள்ளன.
வெண்பூசணியில் புரதம், நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், உடல் எடையை குறைக்க மிகவும் உதவிகரமாக இருக்கிறது.
வெள்ளைப் பூசணிச் சாற்றுடன் சம அளவு தண்ணீர் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றுப் புண் குணமாகும்.
தூக்கமின்மைக்கு சிறந்த மருந்தாக வெள்ளைப் பூசணி பயன்படுகிறது. நீர்க்கோர்வை, இருமல், கபம் போன்றவற்றையும் நீக்குகிறது.
சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள், வெண்பூசணிக்காய்ச் சாற்றுடன், சர்க்கரையையும், தேனையும் கலந்து சாப்பிட்டால் நோய் குணமாகும்.
வெண்பூசணிக்காயை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு, கண் தொடர்பான நோய்கள் வராது. பார்வையும் சிறப்பாக இருக்கும்.
வெள்ளைப் பூசணிச்சாற்றைக் குடித்து வந்தால், உடல் எடை கட்டுக்குள் இருக்கும். இதனால் கால் முட்டுவலி குறையும்.
வெள்ளைப் பூசணிக்காய் சாற்றை குடித்தால், மலச்சிக்கல் பிரச்சனை தீரும். நாடாப் புழுக்களுடன் இதரக் குடற்புழுக்களையும் வெளியேற்றும்.
மூளையைச் சுறுசுறுப்பாக வைக்க வெண்பூசணிக்காய் உதவுகிறது. ரத்த விருத்தியை தருவதோடு, ரத்தத்தையும் சுத்திகரிக்க உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவாக வெண்பூசணி இருக்கிறது. கழிவு நீக்கியாகச் செயலாற்றி, சிறுநீர் வெளியேற்ற உதவுகிறது
காலையில் வெண்பூசணிக்காய் சாற்றை குடித்தால், உடல் சூடு மற்றும் சூட்டுடன் எரிச்சல் ஆகியவை குறைந்து, உடல் குளிர்ச்சி அடைகிறது.