Tap to Read ➤

பெண்கள் தலையில் பூச்சூடினால் கிடைக்கும் நன்மைகள்...!

பூக்களில் இருந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன.
HTML Tamil
பூக்கள் வாசனை தரக்கூடியது மட்டுமல்லாமல், அதையும் தாண்டி பல்வேறு ஆரோக்கியமான நன்மைகளையும் தருகிறது.
பூக்களிலுள்ள பிராண ஆற்றல், மன அழுத்தத்தைக் குறைக்கும். மனதிற்கு நிம்மதியை அளிக்கும் திறன் பூக்களுக்கு உண்டு.
பெண்கள் தலையில் எந்தெந்த பூக்களை சூடி கொண்டால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்.
மல்லிகைப்பூ

மனஅமைதிக்கு வழிவகுக்கும். தலைவலியை குணப்படுத்தும். கண்களுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.
ரோஜாப்பூ

ரோஜாப் பூக்களை தலையில் சூடிக்கொண்டால், தலை சுற்றல், கண் நோய் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.'
கனகாம்பரம்பூ

தலை வலி, தலை பாரத்தை குறைத்து விடும். கபம் போன்ற பிரச்சனைகளையும் சரி செய்யும்.
செண்பகப்பூ

வாதத்தைக் குணப்படுத்தும். கண்பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.
செம்பருத்திப்பூ

 உடல் உஷ்ணத்தை குறைக்கும் திறன் கொண்டது. தலைமுடி தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
தாமரைப்பூ

தலை எரிச்சல், தலை சுற்றலை சரி செய்யும். மன உளைச்சல் குறைந்து, மன அமைதிக்கு வழி வகுக்கும். நிம்மதியான தூக்கத்திற்கு உதவுகிறது.
சித்தகத்திப்பூ

மூளையை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. தலைவலியையும் குறைக்கும் வல்லமை கொண்டது.