Tap to Read ➤
தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
ஒன்று, இரண்டு அல்ல ஏராள நன்மைகள்
HTML Tamil
நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது.
நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வயிற்றின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மற்றும் கல்லீரல், மூளை, இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும் நெல்லிக்காயை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.
நெல்லிக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான செயல்முறையை எளிதாக்குகிறது.
நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வர இதய நோய்கள் வராமல் தடுக்கும்.
நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை முதுமை அடையாமல் பாதுகாக்கிறது.
நெல்லிக்காய் சாப்பிடுவது உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும், கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றவும் உதவுகிறது.
இனிமேலாவது ஒரு ஜூஸ் குடிக்கணும்னு தோணுதுன்னா, நெல்லிக்காயில் ஆன ஜூஸ் குடிக்கலாம்.