Tap to Read ➤

உங்கள் காதல் மனைவியை தேனிலவுக்கு அழைத்துச் செல்ல சிறந்த இடங்கள்..!!

இந்தியாவில் ஹனிமூன் செல்ல ஏற்ற இடங்கள்!!
Sidhanathan K
ஊட்டி, தமிழ்நாடு : நீலகிரியில் உள்ள ஊட்டி மிகவும் பிரபலமான மலைவாசஸ்தலமாகும். தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஊட்டி ஏரி ஆகியவை இங்கு பிரபலமான இடங்கள்.
கேரளா : கடவுளின் சொந்த நாடு என்று வர்ணிக்கப்படும் கேரளா பல தேனிலவு ஜோடிகளை ஈர்க்கிறது. காரணம் ஒரு கலாச்சார கட்டிடம், கோவில், ஆறு, ஏரி என நீர் மற்றும் பசுமையால் சூழப்பட்டதாக இருக்கலாம்.
கூர்க், கர்நாடகா : கூர்க் இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படுகிறது. ஆரஞ்சு தோப்பும் காபியின் நறுமணமும் தேனிலவு கொண்டாடும் அனைவரையும் கவர்கிறது.
கோவா : உலகின் பல நாடுகளில் இருந்து தம்பதிகள் தங்கள் தேனிலவுக்கு இங்கு வருகிறார்கள். அதன் கடற்கரைகள், இயற்கை அழகு மற்றும் மிதமான காலநிலை ஆகியவற்றுடன், கோவா பல நிகழ்வுகளை நடத்துகிறது.
ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் : வாழ்நாள் முழுதும் உங்களின் ஹனிமூன் நாட்களை நினைவுப்படுத்தும் விதத்தில் இயற்கை அமைந்துள்ள பள்ளத்தாக்குகள், ஏரிகள், வானைந்தொடும் பனி மலைகள் என்று பார்க்கும் இடமெல்லாம் அழகு நிரம்பி வழிகிறது.
நைனிடால், உத்தரகண்ட் : இந்தியாவின் ரொமான்டிக்கான மலைப்பகுதி. அழகான ஏரிகள், இயற்கை சூழல், படகு சவாரி மற்றும் வானிலை ஆகியவை மனதைக் கவரும்.
ஜெய்சல்மர், ராஜஸ்தான்: பழைய கால சூழலில் ராயலான முறையில் உள்ள ஜெய்சல்மர் யானை, ஒட்டக சவாரி மற்றும் வரலாற்று பின்னணியுடன் கோட்டைகள் என்று பார்ப்பதற்கு அத்தனை அழகுடன் காட்சியளிக்கிறது.
சிம்லா, இமாச்சல பிரதேசம் : சிம்லா நீண்ட காலமாக தேனிலவு செல்வோர் முதலில் தேர்வு செய்யும் இடமாக இருந்து வருகிறது. இங்குள்ள குளிர்ச்சியான வானிலை அனைவரையும் எளிதில் கவர்ந்துவிடுகிறது.
லட்சத்தீவுகள் : ஒரு சிறிய யூனியன் பிரதேசமாக இருந்தாலும், கடற்கரைகள் மற்றும் காட்டேஜ்கள் இங்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.
டார்ஜிலிங், மேற்கு வங்காளம் : மிகவும் குளிர்ந்த காலநிலையைக் கொண்ட டார்ஜிலிங், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் மிதமான காலநிலை காரணமாக திருமணமான தம்பதிகளால் விரும்பப்படுகிறது.