Tap to Read ➤

ஆரோக்கிய வாழ்வுக்கான வழிமுறைகள்

நோய் நொடியின்றி வாழ்வதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.
HTML Tamil
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதற்கேற்ப ஆரோக்கியமாக நாம் வாழ சில வழிமுறைகளை பார்ப்போம்.
நாள்தோறும் காலையில் ஒரு மணி நேரம் ரிலாக்ஸாக நடைப் பயிற்சி செய்வதன்மூலம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.
உடல் ஆரோக்கியமாக இருக்க, இயற்கையான உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளவது நல்லது.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், பிரிட்ஜில் வைத்த உணவுகளையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
நன்றாக பசிக்கும்போது உணவு உண்ண வேண்டும். உணவை பொறுமையாக மென்று சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகும்.
டிவி அல்லது செல்ஃபோனை பார்த்துக்கொண்டே சாப்பிடுவது சரியான முறையல்ல. முடிந்த வரை தரையில் அமர்ந்து சாப்பிடுவது நல்லது.
உடலுழைப்பை பெறும் வகையில், கடைக்கு நடந்து செல்வது, விடுமுறை நாட்களில் வீட்டை சுத்தப்படுத்துவது, வீட்டுப் படிகளில் ஏறி இறங்குவது போன்றவற்றை செய்யலாம்.
தினமும் 8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். இரவு 10 மணிக்கு முன்பாக தூங்குவது மிகவும் நல்லது.
தொலைக்காட்சி மற்றும் செல்ஃபோன் பார்ப்பதை குறைத்து விட்டு, நல்ல புத்தகங்களைப் படிப்பது உடலுக்கு நல்லது.
உடல் மற்றும் மனதை மேம்படுத்த தியானம், மூச்சுப்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்து வந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.