Tap to Read ➤

உணவுப் பொருட்கள் கெடாமல் பாதுகாக்க சில டிப்ஸ்!

உணவுப் பொருட்களை எளிய முறையில் கெடாமல் பாதுகாக்கலாம்.
HTML Tamil
காய்கறி, மளிகை உள்ளிட்ட உணவுப் பொருட்களை கெடாமல் பாதுகாப்பது இல்லத்தரசிகளுக்கு கடும் சவாலானதாகும்.
வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை கெடாமல் எப்படி பாதுகாப்பது என்பது குறித்து பார்ப்போம்.
சின்ன வெங்காயத்தை வெயிலில் சிறிது நேரம் உலர்த்தி எடுத்து வைத்தால், ஒரு மாதம் வரை கெடாமலும், முளை வராமலும் இருக்கும்.
வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
எலுமிச்சம் பழத்தை தினமும் ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்தால், ஒருவாரம் வரை அப்படியே இருக்கும்.
உடைத்த தேங்காயில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.
கறிவேப்பிலை காயாமல் இருக்க அதன்மீது அலுமினியப் பாத்திரத்தை மூடி வைத்தால், கறிவேப்பிலை காயாமல் இருக்கும்.
இஞ்சியை ஈரத்துணியில் சுற்றி தண்ணீர் இருக்கும் பாத்திரத்தின் மேல் வைத்தால், 10 நாட்கள் வரை கெடாமல் அப்படியே இருக்கும்
மிளகாய் நீண்ட நாட்கள் இருக்க அதன் காம்பை எடுத்துவிட்டு, பேப்பரில் சுற்றி பிரிட்ஜில் வைத்தால் நீண்டநாள் கெடாமல் இருக்கும்.
வாழைப்பழத்தை ஈரத்துணியில் சுத்தி வைத்தால், கறுத்து போகாமல் பிரஷ்ஷாக இருக்கும்.
முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க, முட்டை கூட்டின் மீது சிறிது அளவு ரீஃபைண்ட் ஆயில் தேய்த்தால் கெட்டுப் போகாது.