Sidhanathan K       Dec 17, 2024

இந்த சிறிய செர்ரி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பெரிய ஆரோக்கிய நன்மைகள்..!!

பெரும்பாலும் குளிர் பிரதேசங்களில் வளரும் இந்த செர்ரியின் சுவையானது பழுக்க வைக்கும் நிலையை பொறுத்து புளிப்பு மற்றும் இனிப்பு என மாறுபடுகிறது.

உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாப்பாக வைத்திருக்க தினமும் செர்ரி பழங்களை சாப்பிடலாம்.

சருமத்திற்கு பொலிவை கொடுத்து இளமை தோற்றத்தை தக்கவைப்பதோடு, முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.

மங்கலான பார்வை, மாலைக்கண் நோய் போன்றவை ஏற்படாமல் தடுத்து, கண்பார்வையை மேம்படுத்துகிறது.

குடலிலுள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது.

செர்ரியில் நிறைந்துள்ள வைட்டமின் ஏ மற்றும் ஈ, முடி உதிர்தல், பொடுகு மற்றும் முடியில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.

இது பசி உணர்வை கட்டுப்படுத்தி எடை குறைப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.

இதில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதயத்திற்கு சீரான இரத்த ஓட்டம் கிடைப்பதற்கும், இரத்த நாளங்களில் இரத்தம் உறைவதை தடுப்பதற்கும் தினமும் செர்ரி பழங்களை சாப்பிடலாம்.

இந்த பழத்தில் பல நன்மைகள் இருந்தாலும் ஒரு நாளைக்கு 100 கிராம் அளவு எடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.