Tap to Read ➤

பூமிக்கு மிக அருகில் கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளை!!

சூரியனை விட 10 மடங்கு பெரிய பிளாக் ஹோல்..!!
Sidhanathan K
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் விண்வெளியில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன் மூலம் பூமிக்கு மிக அருகில் உள்ள கருந்துளையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது சூரியனை விட 5 முதல் 100 மடங்கு நிறை கொண்டது. பால்வீதியில் இதுபோன்ற 100 மில்லியன் கருந்துளைகள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.
கருந்துளைகள் மிகப்பெரியது மற்றும் சக்தி வாய்ந்தது. அவற்றின் ஈர்ப்பு விசையால் நட்சத்திரங்களை விழுங்கும் திறன் கொண்டது.
மேலும் அவை ஒளியைக் கூட கடந்து செல்ல அனுமதிக்காது.
பூமிக்கு அருகே புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளை சூரியனை விட 10 மடங்கு பெரியதாக உள்ளது. அதற்கு கயா BH 1 என்று பெயரிட்டுள்ளனர்
பூமியிலிருந்து 1600 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த கருந்துளையானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கண்டுபிடிப்பு முந்தைய கண்டுபிடிப்புகளை விடவும் 3 மடங்கு அருகில் இந்த கருந்துளை இருப்பதாக வாஷிங்டன் தேசிய விண்வெளி மையம் தெரிவித்துள்ளனது.