ஆசிய நாட்டை பிறப்பிடமாக கொண்ட சங்கு பூவின் அறிவியல் பெயர் கிளிட்டோரியா டெர்னேடியா.
சங்கு பூவில் ஆன்டி ஆக்ஸிடன்ட் கலவையான அந்தோசயனின்கள் அதிகம் உள்ளன. சங்கு பூவின் தனித்துவமான நீல நிறத்திற்கு இந்த கலவையே காரணமாகும்.
சங்கு பூவை வெந்நீரில் ஊறவைத்து எழுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கிடைக்கும் மூலிகை கலவையை ப்ளூ டீ என்கிறார்கள்.
இந்த ப்ளூ டீ சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து, முன்கூட்டிய முதுமையை குறைக்கிறது.
இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது மற்றும் புளூ டீயில் உள்ள ஃபிளாவனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கின்றன.
இது தலையின் மேற்பகுதியில் அமைந்துள்ள நுண் துளைகளில் இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியை தூண்டக்கூடியது.
ப்ளூ டீ கல்லீரலை பலப்படுத்துவதோடு, தேமல் மற்றும் கரும்புள்ளிகளை குணமாக்குகிறது.
இது சர்க்கரை நோயாளிகளின் உடலில் சர்க்கரை அளவை சீராக வைத்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ப்ளூ டீ குடித்தால் சில நேரங்களில் நமக்கு ஏற்படும் கோபமும், மன அழுத்தமும் பறந்துவிடும்.
தொப்பை ஏற்பட காரணமான கல்லீரல் கொழுப்பு நோயை தடுக்கிறது. இதனால் உடல் எடை குறைகிறது.