Tap to Read ➤

புத்தர் என்ன கூறுகிறார் தெரியுமா ?

கௌதம புத்தர் மேற்கோள்கள்
Sidhanathan K
ஆசையே துன்பத்தின் அடிப்படை.
ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஒரு காரணம் உண்டு. காரணமின்றி விளைவில்லை.
நிரந்தரமானது என்று எதையும் ஏற்க முடியாது.
பெருமையின் சிகரத்தை எட்டியதெல்லாம் வீழ்ச்சியடையும்.
தோன்றுவதெல்லாம் நிச்சயம் அழியும்.
எங்கெல்லாம் வாழ்வு தென்படுகிறதோ அங்கெல்லாம் சாவுமுண்டு.
பிரபஞ்சம் நிரந்தரமானது அல்ல, அனைத்தும் மாறிக்கொண்டே செல்கிறது.
அமைதி உள்ளே இருக்கிறது. அதை வெளியில் தேட வேண்டியதில்லை
கடந்த காலத்தை நினைத்து வாழ வேண்டாம், எதிர்காலத்தை நினைத்து கனவும் காண வேண்டாம், இந்த தருணத்தை மனதில் கவனித்திருங்கள்.
இவ்வுலகில் எக்காலத்தும் பகைமை பகைமையால் தணிவதில்லை, அன்பினாலேயே தணியும்.
பொறுமைதான் மிக உயர்ந்த பிரார்த்தனை.