அன்றைய நாளை தொடங்குவதற்கு காலை உணவு மிகவும் அவசியம் ஆகும். காலை உணவை தவிர்ப்பதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.
சிலர் காலை உணவாக வாழைப்பழத்தை மட்டும் சாப்பிடுவதுண்டு. ஆனால் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து, மக்னீசியம் போன்ற பல்வேறு அத்தியாவசிய சத்துக்கள் இருந்தாலும், வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல.
வாழைப்பழத்தில் இயற்கை சர்க்கரைகள் அதிகம் இருப்பதால், அவை உடலுக்கு தேவையான உடனடி ஆற்றலை மட்டும் வழங்குவதால், சில மணிநேரங்களுக்கு பிறகு மீண்டும் சோர்வடைய செய்துவிடும்.
வாழைப்பழம் அமிலத்தன்மை கொண்டது, எனவே வெறும் வயிற்றில் சாப்பிட்டால், குடல் பிரச்சனைகளை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது.
வாழைப்பழத்தில் மெக்னீசியம் அதிகமாக உள்ளதால், இரத்தத்தில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் இடையே சமநிலையின்மையை ஏற்படுத்தி இதயத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
தற்போது பல பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்படுகின்றன. எனவே காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் மட்டுமின்றி வேறு எந்த பழத்தையும் சாப்பிட வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
வாழைப்பழத்தை சாப்பிட சிறந்த நேரம் காலை வேளை தான். அந்தவகையில் காலையில் வாழைப்பழத்தை சாப்பிட விரும்பினால் அதை மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.