Varalakshmi N       Mar 15, 2023

பாரிஜாத மரம் வீட்டில் வளர்க்கலாமா?

இப்பூவிற்கு நைட் ப்ளூமிங் ஜாஸ்மின் (Night Blooming Jasmine) என்று மற்றொரு பெயர் உண்டு

பாரிஜாத பூ அலங்காரத்திற்கு பெரிதும் பயன்படுத்துவதுண்டு, வாஸ்து மற்றும் மருத்துவ பண்புகளும் கொண்டுள்ளது

வீட்டில் வளர்க்கப்படும் மரம், செடி, கோடி வகை என வாஸ்து சாஸ்திரத்தில்     தாவரங்கள் எப்பொழுதும் முக்கிய இடம் பெற்றுள்ளது

அந்த வகையில் வாஸ்து அங்கீகரிக்கப்பட்ட தாவரமாகவும் இந்த பாரிஜாத மரம் பரிந்துரைக்கப்படுகிறது

சிறிய ஆரஞ்சு மையத்துடன் வெள்ளை இதழ்களுடன் மிகவும் அழகாக இரவில்     பூத்து நல்ல இனிமையான வாசனையை பரப்பும்

மேலும் வீட்டிற்கு நேர்மறை மற்றும் நல்ல ஆற்றலைச் சேர்ப்பதாக கூறப்படுகிறது

கிழக்கு அல்லது வடக்குப் பக்கத்தில் வைக்க வேண்டும், இதனால் கெட்ட     சகுனங்களும் ஆற்றல்களும் அகற்றப்படும் என்று நம்பப்படுகிறது

இந்த பூவின் எண்ணெய் படபடப்பு குணம், மன அழுத்தம் குறைய  மருந்தாக  பயன்படும்

வறட்டு இரும்பல், சளி இரும்பல்  சைன்ஸ் இலை மற்றும் துளசி இலை     இரண்டையும் கொதிக்கவைத்து தேநீர் குடித்தால் வறட்டு இரும்பல் குணமாகும்

இடுப்பு வலி குறைய இதின் இலையை தண்ணீரில் கொதிக்கவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் இடுப்பு ,மற்றும் நரம்பு வலி குணமாகும்

இலையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் சருமத்தில் ஏற்படும் அலர்ஜி     சரிசெய்ய உதவும்