சன்னக் கொண்டை மீன், ஏரி, குளம், ஆறுகளில் இருக்கும் ஒரு வகையான சிறிய கொண்டை மீன், இதை சாப்பிட்டால் உடலுக்கு சுறுசுறுப்பு உண்டாகும், புண்களை ஆற்றும்
கிணற்று மீன், பொதுவாக கிணற்று மீன் வாயுவை உண்டு பண்ணும், பைத்தியத்தை தெளிய பண்ணும்
ஏரி மீன் சாப்பிட்டால் மேக (பால்வினை நோய்) வியாதிகளை குணமாக்கும்
உளுவை மீன், ஏரி, குளம், கிணறு, ஆறுகளில் காணப்படும், நீளமாக வளரக்கூடிய வகை, எல்லா வியாதிகளை குணமாகும், முக்கியமாக பத்தியத்திற்கு கொடுப்பார்கள்
உல்லமீன், பெரும்பாலும் ஆற்றில் காணப்படும், ஆற்று மீன்களிலேயே உல்லமீன் தான் உடலுக்கு அதிக சக்தியை தரும், அதிகம் சாப்பிட்டால் பேதியை உண்டு பண்ணும்
ஆற்று மீன், ரத்தை மற்றும் தாதுவை விருத்தி செய்யும்