Sidhanathan K       Feb 29, 2024

முளைகட்டிய உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்..!!

பொதுவாக உருளைக்கிழங்கு முளைகட்டியோ அல்லது பச்சை நிறத்திட்டுகளிலோ இருந்தால் அவற்றை சாப்பிடக்கூடாது. இந்த கிழங்குகள் தோல் சுருங்கி கசப்பு தன்மை கொண்டதாக இருக்கும். மேலும் இந்த கிழங்குகள் சுவையற்றதாகவும் இருக்கும்.

முளைகட்டிய உருளைக்கிழங்கு சாப்பிடுவது ஆரோக்கியமானது அல்ல. அதனை உட்கொள்வதால் இதய பாதிப்புகள் முதல் நரம்பு மண்டல கோளாறுகள் வரை பல்வேறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

அவ்வாறு உருளைக்கிழங்கு முளைக்கட்டியது என்றால் அதற்குள் சில ரசாயன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தமாம். உருளைக்கிழங்கு முளைகட்டும் போது சோலனைன் மற்றும் ஆல்பா சாகோனைன் என இரண்டு வகையான நச்சு ஆல்கலாய்டுகளை உருவாக்குகிறது.

இவற்றில் சோலனைன் அதிக நச்சுத்தன்மை கொண்டது. இதனை சிறிதளவு உட்கொண்டாலே பல கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். உருளைக்கிழங்குகளின் தோல் பச்சையாக இருந்தாலும் அதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றிலும் இந்த நச்சுத்தன்மை வாய்ந்த ஆல்கலாய்டுகள் இருக்கும்.

பொதுவாக முளைக்கட்டிய உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் சர்க்கரையாக மாற்றப்படுகிறது. இது போன்ற உருளைக்கிழங்கை சாப்பிடுவதால் தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும். மிக தீவிர நிலையில் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படலாம்.

இந்த முளைக்கட்டிய உருளைக்கிழங்கை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் போது கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பிறக்கும் குழந்தைகள் பிறவி குறைபாடுகளுடன் பிறப்பதற்கும் வாய்ப்புள்ளது.

முளைக்கட்டிய உருளைக்கிழங்கின் தோல் பிரஷ்ஷாக இருந்தால், அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அப்படியே இருக்கும் என்பதால் முளைக்கட்டியதை மட்டும் நீக்கிவிட்டு சாப்பிடலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. அதுவே தோல் சுருங்கி இருந்தால் அதனை கண்டிப்பாக தவித்துவிட வேண்டுமாம்.

உருளைக்கிழங்கை ஈரப்பதமான இடத்திலோ அல்லது பிளாஸ்டிக் பைகளிலோ சேமித்து வைப்பதால் அவை முளைக்கட்டுவதோடு, விரைவில் கெட்டுப்போய்விடும். வேண்டுமானால் பேப்பரை சுற்றி வைக்கலாம். எக்காரணம் கொண்டும் உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories