Varalakshmi N       Mar 29, 2024

தினமும் பால் குடிக்கலாம்? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

பாலில் வைட்டமின் ஏ, பி, டி, புரதசத்து, லாக்டிக் அமிலம் ஆகியவை நிறைந்துள்ள, எலும்பு வளர்ச்சிக்கு முக்கிய பங்கு பெற்றுள்ளது

சிறு குழந்தை முதல், முதியவர் வரை தினமும் பால் சாப்பிடுவது நல்லது,  வயதிற்கேற்ப அளவுடன், மேலும் எந்த நேரத்தில் குடிக்கலாம் என்பதை பற்றி  பார்க்கலாம்

குழந்தைகளுக்கு சம அளவு தண்ணீர் கலந்து நாள் ஒன்றுக்கு 1/2 லிட்டர் வரை சாப்பிடலாம்

30-35  வயது வரை தினமும் 3 டம்ளர் பால் சாப்பிடலாம்

40 வயது உள்ளவர்கள் தினம் 3 டம்ளர் பால் சாப்பிடலாம்

50 வயது உள்ளவர்கள் தினம் 1 வேளை 1 டம்ளர் பால் சாப்பிட்டால் போதும்

பிரசவித்த தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்டும் முன், பூண்டு சேர்த்து  குடித்தால், பால் நன்கு சுரக்கும், தினமும் 1 லிட்டர் வர குடிக்கலாம்

தினமும் பால் சாப்பிடுபவர்களுக்கு புற்று நோய் வரும் அபாயத்தை தடுப்படுகிறது

சிறுநீரக பிரச்சனை, கல்லடைப்பு, சரும அலர்ஜி பிரச்சனைகள் உள்ளவர்கள், பால் கட்டாயம் சாப்பிடக்கூடாது