அரிசி இந்தியாவின் பாரம்பரிய உணவாகும். அதேபோல், அரிசி ஜப்பானியர்களின் முக்கியமான உணவும் கூட. இத்தகைய அரிசியை குக்கரில் சமைத்து சாப்பிடுவதால் வரம் ஆபத்துகளை பார்க்கலாம்.
முந்தைய நாட்களிலெல்லாம் பாரம்பரியமாக அரிசியை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து, வெந்ததும் கஞ்சி வடித்து சாதத்தை சாப்பிடுவோம்.
ஆனால், தற்போது நமது வீட்டு வேலைகளை எளிதாக்கும் வகையில் விரைவில் சமைப்பதற்காக குக்கரை பயன்படுத்துகிறோம்.
அரிசியை குக்கரில் சமைக்கும்போது, புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் சாதத்தில் முழுமையாக இருந்துவிடுகிறது. இதனால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும், குக்கரில் சமைக்கும் சாப்பாட்டில் கஞ்சி நீக்கபடவில்லை என்பதால், கலோரி குளுக்கோஸ் அளவு அதிகம் இருப்பதால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கும் வாய்ப்பு உண்டு.
அதுவே, சாதத்தை வடிக்கும்போது அரிசியின் மேல்பகுதியில் உள்ள மாவுச்சத்து (ஸ்டார்ச்) நீக்கப்படுகிறது. இந்த ஸ்டார்ச் தான் ஒருவரின் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாகும்.
குக்கர் சாதம் செரிமானத்திற்கு நல்லது. அதேநேரம், அதிக அழுத்தத்தில் சாதத்தை சமைக்கும் போது, அரிசியில் உள்ள பூஞ்சை மற்றும் பிற பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன.
புள்ளி விவரங்களின் படி, வடித்த சாதத்தை காட்டிலும், குக்கர் சாதம் அதிக நன்மைகளை கொண்டுள்ளது. அதற்காக வடித்த சாதம் குறைவான நன்மைகளை வழங்குகிறது என்றும் சொல்லிவிட முடியாது.
வடித்த சாதமும் குக்கர் சாதத்திற்கு இணையான நன்மைகளை வழங்குகிறது. ஆனால், சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் வடித்த சாதம் சாப்பிடுவதே நல்லது.