Tap to Read ➤

இந்தியாவில் அதிகரித்துள்ள பெண்களுக்கு எதிரான வழக்குகளும் குற்றங்களும்!

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கை என்ன சொல்கிறது?
Sidhanathan K
2021ல் இந்தியா முழுவதும் 60 லட்சத்திற்கும் அதிகமான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2020ஐ விட 7.6% குறைவு.
இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் பிற சிறப்பு சட்டங்களின் கீழ் (போக்சோ, எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டம்) பதிவு செய்யப்பட்ட வழக்குகள் என இந்த வழக்குகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும்.
பிற சிறப்பு சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 3.7% அதிகரித்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 4,28,278 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2020ஐ விட 15.3% அதிகம்.
பெண்களுக்கு எதிரான மொத்த வழக்குகளில் 31.8% கணவர்கள் அல்லது தெரிந்தவர்களால் செய்யப்பட்டவை.
2021 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 1,49,404 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது 2020-ஐ விட 16.2% அதிகம். இதில் 38% POCSO வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 20,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2021ல் சிறார்களுக்கு எதிராக மொத்தம் 31,170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவும் 2020ஐ விட 4.7% அதிகம்.
அவர்களில் 76.2% பேர் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட வளாரிளம்பருவத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.