Tap to Read ➤

புற்றுநோயை வரவிடாமல் தடுக்கும் காலிஃப்ளவர்

காலிஃப்ளவர் சாப்பிட்டால் கேன்சர் செல்கள் உருவாகாது.
HTML Tamil
சமையலுக்கு பயன்படுத்தும் காலிஃப்ளவரில் மாவுச்சத்து, உயிர்ச்சத்து, கால்சியம், சோடியம், வைட்டமின் சி, மாங்கனீஸ் போன்றவை நிறைந்துள்ளன.
கர்ப்பப்பை, பெருங்குடல், மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய்களை எதிர்த்து, ஆரோக்கியமாக வாழ காலிஃப்ளவர் வழி செய்கின்றது.
காலிஃப்ளவரை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டால், கீல்வாதம், நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
உடல் பருமனை குறைக்க விரும்புபவர்கள், தொடர்ந்து உணவுடன் காலிஃப்ளவரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
காலிஃப்ளவரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், பக்கவாதம் மற்றும் இதய கோளாறுகள் வராமல் தடுக்கலாம்.
மூட்டு வலி, வீக்கம் போன்ற பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள் காலிஃப்ளவரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
காலிஃப்ளவர், குடல் பிரச்சனைகள் போன்ற அழற்சித் தரும் நோய்களை குணமாக்கும் திறன் கொண்டது.
காலிஃப்ளவரை உணவுடன் சேர்த்து சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், பற்கள் போன்றவை வலிமை பெறுகிறது
கண் பார்வை மங்குதல், கண் புரை போன்ற நோய்கள் ஏற்படாமல் பாதுகாத்து,  கண்களை பாதுகாக்கிறது.
காலிஃப்ளவர் சிறுநீர் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் திறன் கொண்டது. சிறுநீரகப் பையில் பாதிப்புகள் ஏற்படாமலும் காக்கிறது.