சருமத்தில் அலர்ஜி ஏற்பட சூரியனிடமிருந்து வரும் கதிர்கள், சுத்தமில்ல ஆடைகள், சில வகையான காய்கறிகள் என பல காரணங்கள் உண்டு
அழுக்குகள், தூசி, பங்கஸ், பல்லி, கம்பளிப் புழுக்கள், ஒவ்வாமை உண்டாகும் கருவாடு, கத்திரிக்காய், புளி, ஆகிய உணவுகள் மூலம் அலர்ஜியானது எளிதாக வந்துவிடும்
அலர்ஜி குணமாக எலுமிச்சைபழச்சாற்றை அலர்ஜி உள்ள இடத்தில் பஞ்சால் தொட்டு தடவினால், 2-3 நாட்களில் அலர்ஜி போய்விடும்
இரவு படுக்கும் முன் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சைபழசாற்றை சிறிதளவு கலந்து அலர்ஜி உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் அலர்ஜி நீங்கும்
கசகசாவை மைய அரைத்து, எலுமிச்சை சாற்றுடன் கலந்து அலர்ஜி இருக்கும் இடத்தில் தடவி, நன்கு காய்ந்ததும் நீரினால் கழுவ வேண்டும். தொடர்ந்து 2 அல்லது 3 நாட்கள் செய்து வர அலர்ஜி குணமாகும்