Tap to Read ➤

பல் கூச்சத்திற்கான காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள்..!!

பல் கூச்சத்திலிருந்து விடுபட இந்த செயல்முறையை பாலோவ் பண்ணுங்க..!!
Sidhanathan K
பற்களின் மேலுள்ள எனாமல் தேய்ந்து, கூழ் போன்ற மென்மையான ‘டென்ட்டின்’ லேயர் (Dentin) வெளியே தெரிவதுதான் பல் கூச்சத்திற்கு முக்கிய காரணம் ஆகும்.
இந்த டென்டின் அடுக்கில் பற்களின் உணர்வு நரம்புகள் உள்ளன. இந்தப் பகுதி வெளிப்படும் போது, சூடு, குளிர், இனிப்பு, புளிப்பு போன்ற உணர்வுகள் பல மடங்காக பெருகும்.
பயன்படுத்தும் பிரஷ் மற்றும் பல் விளக்கும் முறை காரணமாக பல்லில் தேய்மானம் ஏற்படலாம்.
அதாவது, சரியான முறையில் பல் துலக்காதது, பல் துலக்கும்போது மிகவும் அழுத்தமாக தேய்ப்பது, தவறான திசைகளில் தேய்ப்பது மற்றும் தவறான பிரஷ் உபயோகிப்பது போன்றவற்றால் எனாமல் தேய்ந்து போகும் வாய்ப்புகள் அதிகமாகும்.
ஈறுகளில் பிரச்சனை இருந்து அதனால் பல்லின் வேர் வெளியே தெரிவதன் மூலம் பற்கூச்சம் ஏற்படலாம்.
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை மற்றும் உணவுக்குழாய் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பதனால் அதிக அமில சுரப்பு காரணமாக பல் கூச்சம் ஏற்படலாம்.
அதிக அமிலம் சார்ந்த உணவுகள் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்வதன் காரணமாக கூட பல்லின் கூச்சம் ஏற்படலாம்.
சிலர் தூங்கும் போது பல் கடித்துக் கொண்டே தூங்குவார்கள். இந்த நிலை ப்ரூக்சிசம் என்று அறியப்படுகிறது. இதன் காரணமாகவும் பல் தேய்மானம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
தூங்கும்போது பல் கடிப்பவர்களுக்கென பிரத்யேக மவுத் கார்டு (ஸ்பிளிண்ட்) உள்ளது. அதனை தூங்கும்போது பயன்படுத்துவதன் மூலம் தேய்மானத்தை தடுக்கலாம்.
பல் கூச்சத்தை தவிர்க்க சிறிதளவு சுடு நீரில் உப்பு போட்டு அல்லது தேன் கலந்தும் கொப்பளிக்கலாம். ஆனால் நொடிகளுக்கு மேல் கொப்பளிக்க வேண்டாம்.
மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது. மேலும் குளிர் மற்றும் அதிக சூடான பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும்.
பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்க teeth whitening செய்வதுண்டு. இவ்வாறு செய்யும் போது பல்லின் எனாமல் தேயும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் தேவையில்லாமல் teeth whitening செய்வதை தவிர்க்கலாம்.
பல் கூச்சம் தொடங்கும் சமயத்தில் desensitizing toothpaste பயன்படுத்தலாம். புளூரைட் உள்ள மவுத்வாஷ் பயன்படுத்தலாம்.
நம் வாய்க்குள் செல்லும் அனைத்தும் முதலில் பற்களை பாதிக்கிறது. பற்களுக்கு ஏற்படும் பாதிப்பு உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே பற்களை பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பது அவசியம்.