கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற தானிய வகைகளை சாப்ப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
நாம் உண்ணும் அரிசி மற்றும் கோதுமையை விட இந்த சிறுதானியங்கள் பல மடங்கு சத்துள்ளது. ஆனால், நாகரீகம் என்ற பெயரில் இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டோம்.
பொதுவாக, சிறுதானியங்கள் அனைத்தும் இரத்த தட்டை அணுக்கள் தடிமன் ஆவதை தடுத்து இரத்தத்தை திரவ நிலையிலேயே வைத்திருக்க உதவுகிறது.
உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்கிறது. இதில் உள்ள கால்சியம் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது.
நார்ச்சத்து(Fiber) மிகுந்த தினை மலச்சிக்கலை போக்குகிறது. வயிறு, குடல், கணையம் போன்ற உள் உறுப்புகளை வலுப்படுத்தி, அவற்றிலுள்ள புண்களை ஆற்றுகிறது.
இது இரத்த சோகையை தடுக்கிறது. மற்ற சிறுதானியங்களை காட்டிலும் சாமையில் 7 மடங்கு அதிக நார்ச்சத்து இருப்பதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
குதிரைவாலியில் புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, ஸ்டார்ச், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.