அளவில் சிறியதான சியா விதைகள் நம் உடலுக்கும் மனதிற்கும் பலன் தரக்கூடிய அற்புதமான விதையாகும்.
சியா விதைகளில் சுமார் 92 சதவீதம் அளவுக்கு நார்ச்சத்து நிரம்பியுள்ளது.
எடை குறைப்பதில் இருந்து சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது வரை, சியா விதைகள் மருத்துவத்தில் மிகவும் பயனுள்ளது.
சியா விதையிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அதிகப்படியான பசியைக் கட்டுப்படுத்தி, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்வதோடு, ஜீரண சக்தியையும் மேம்படுத்துகின்றன.
சியா விதைகளில் ஜீரோ கொலஸ்ட்ரால் இருப்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சியா விதைகளைச் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வரையிலும் கைவிடாமல் ஸ்பூனால் கலக்கிவிட வேண்டும்.
நன்கு கலந்த பிறகு, அரை எலுமிச்சை சாற்றை பிழிந்து, ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இந்த பானத்தைக் குடிக்க வேண்டும்.
இந்த பானத்தை தவறாமல் குடித்து வரும்போது, ஆரோக்கியமான முறையில் ஒரே வாரத்தில் ஒரு கிலோ வரை எடையை குறைக்க முடியும்.
சியா விதைகளை வெந்நீருக்கு பதிலாக பாலில் சேர்த்து ஊற வைத்து குடிக்கலாம்.
மேலும், இதனுடன் பழங்களை நறுக்கி, புரூட் சாலட் போல காலை உணவுக்கு பதிலாக எடுத்துக் கொள்ளலாம்.