பீட்டாவோல்ட் (Betavolt) என்ற சீன ஸ்டார்ட்அப் நிறுவனம், 50 ஆண்டுகள் வரை சார்ஜை தக்கவைத்துக்கொள்ளும் ஒரு அற்புதமான பேட்டரியை உருவாக்கியுள்ளது.
இது ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் லித்தியம் பேட்டரிகள் போலல்லாமல், அணுசக்தி (Nuclear) யில் இயங்கும் முதல் அணுக்கரு பேட்டரி ஆகும்.
ஒரு 5 ரூபாய் நாணயத்தை விட சிறிய அளவில் இருப்பது தான் இதன் சிறப்பம்சம். அதாவது, 15x15x5 கன மில்லிமீட்டர் அளவு கொண்டது.
இந்த பேட்டரியில் சிதைந்த ஐசோடோப்புகளால் வெளியிடப்படும் ஆற்றலை மின்சாரமாக மாற்றும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இது தான் உலகின் முதல் நியூக்ளியர் பேட்டரி. இந்த பேட்டரி 3 வோல்ட்டில் 100 மைக்ரோவாட் ஆற்றலை வழங்குகிறது.
நிக்கல்-63 எனப்படும் கதிரியக்க தனிமம் மற்றும் டைமண்ட் செமிகண்டக்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் கதிரியக்கமற்றது என்று பீட்டாவோல்ட் கூறுகிறது.
இந்த பேட்டரி -60 முதல் 120 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் வேலை செய்யும் திறன் கொண்டது என்றும் பீட்டாவோல்ட் கூறியுள்ளது.
வரும் காலத்தில் இந்த பேட்டரி, ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற கேட்ஜட்டுகளில் இடம்பெற்றால் இனி 50 வருடத்திற்கு சார்ஜ் செய்யும் தேவை இருக்காது, சார்ஜரின் தேவையும் இருக்காது.
மேலும், விண்வெளி, AI உபகரணங்கள், மருத்துவ உபகரணங்கள், சிறிய ட்ரோன்கள் மற்றும் மைக்ரோ ரோபோட்க்கள் போன்ற பல பயன்பாடுகளில் இந்த பேட்டரிகள் பயன்படுத்தப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.