Tap to Read ➤

காப்பித் தூளை இப்படி யூஸ் பண்ணினால் முகம் பளிச்சிடும்!

முகம் பளிச்சிட ... காஃபித்தூளை விதவிதமாக பயன்படுத்தி அழகை மேம்படுத்தலாம்.
HTML Tamil
காஃபித்தூள் நமக்கு புத்துணர்ச்சியூட்டும் பானமாக மட்டுமில்லாமல் நம் முகத்தை அழகூட்டவும் பயன்படுகிறது.
காஃபி தூள் 1 கப், ஏலக்காய் பொடி 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன், சர்க்கரை 1 கப் இவற்றை கலந்துகொள்ள வேண்டும்.
இதை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகம், கை கால்களிலும் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து மிதமான நீரில் குளிக்கவும்.
ஒரு கப் காஃபி பொடியில் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் ஸ்க்ரப் போல் 10 நிமிடங்களுக்கு தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
கற்றாழையை 5 ஸ்பூன் எடுத்து மசித்து, அதோடு காஃபி பொடி ஒரு கப் கலந்து முகத்தில் 10 - 15 நிமிடங்களுக்கு ஸ்கர்ப் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
4 ஸ்பூன் காஃபி தூளில், ஒரு கப் பால், 2 ஸ்பூன் தேன் கலந்து முகம், கழுத்து, கை, கால்களில் தடவி 10 - 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
4 ஸ்பூன் காஃபி தூள், 4 ஸ்பூன் பட்டர், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கெட்டியான பதத்தில் கலக்கி முகம், கழுத்து, கை, கால்களில் தடவி 10 - 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வந்தால், முகம், கழுத்து, கை, கால்கள் பளிச்சிட்டு, புதுப்பொழிவுடன் காணப்படும்.