சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி மூக்கில் நீர் வடிந்து, சில நாட்களில் சளியாக மாறி இருமலை ஏற்படுத்திவிடும்
இதனால் அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகையில் பாதித்து, இயற்கை காற்றின் தூய்மை கெடுவதால் ஆஸ்துமா போன்ற நோய்களை உண்டாக்கிவிடும்
இந்த தொல்லையிலிருந்து விடுபட எளிய வீட்டு வைத்தியம் பற்றி பார்க்கலாம்
கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைக்கு கொடுத்து வந்தால் சளி கரைந்து படிப்படியாக இருமல் நீங்கும்
100 மில்லி அளவு கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து சிறிது கற்கண்டு பொடி செய்து அதனுடன் சேர்த்து குடித்து வர தொண்டை கமறல் நீங்கும்
வாயு தொல்லை உள்ள பெரியவர்கள், குழந்தைகளுக்கு கற்பூரவள்ளி இலையை உபயோகித்து பஜ்ஜி செய்து கொடுக்கலாம்
ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சிரைப்பு, இளைப்பு, இருமல் ஏற்படும். தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து தேன் அல்லது பனங்கற்கண்டு அருந்திவந்தால் பாதிப்புகள் படிப்படியாக குணமடையும்